Thursday, 5 March 2015

இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை (GEM THEROPY)

அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் .

GEM THERAPY

இரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இரத்தினங்கள் மணிகளாக உருட்டி மாலையாக அணிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இரத்தினதிற்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது.
குறிப்பு: இதை உடம்பின் மேல் மாலையாகவோ, ஆபரணங்களில் பதித்து அணியலாம். சாப்பிடக்கூடாது.
இரத்தினங்கள் 2. வகையாக பட்டை தீட்டப்படுகிறது.
1. Cutting Method 
2. Cabochon Method
ஒரு மெருகேற்றப்பட்ட கல் கிடைப்பதற்கு 6 விதமான வழிகள் (6 Steps) 6 விதமான நபர்களின் உழைப்பும் தேவைப்படுகிறது.
1. Mining Raw Material - தளங்களை சேகரிப்பவர்
2. Analyzing -
கிடைத்திருக்கும் மூலப்பொருள் எந்த வகை இரத்தினத்தை சேர்ந்தது என மதிப்பிடுவர்.
3. Cutting -
கிடைக்கும் இரத்தினத்தை சரியான அளவில் வெட்டுபவர்.
4. Preforming -
வெட்டிய கற்களை சரியான அளவில் உருட்டுபவர்.
5. Polishing -
உருட்டிய கற்களை மெருகேற்றுபவர்.
6. Quality & Marketing -
மெருகேற்றிய கற்களை தரம் பிரித்து விற்பனை செய்வர்.

CABOCHON METHOD:

நத்தை ஓடு போல் இது மெருகேற்றப்படுகிறது. Moon Stone, Sun Stone, வைடூரியம் (Cast Eye), Star Ruby, Star Sapphire  போன்ற கற்களின் மேல் நூல்கள் (Rays) வெளிப்படும். Cabochon  முறையில் மெருகேற்றப்படுவதால் Rays சிறப்பாக அதன் மேல் பாகத்தில் தெரிய வாய்ப்பாக உள்ளது.
1.1 நூல் கல் - Single Rays
2.4
நூல் கல் - Four Rays
3.6
நூல் கல் - Six Rays
மூன்று வகையான கற்கள் (Cabochon Method - ல் பாலீஷ் செய்யபடுகிறது.
கற்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர்.
1. Super Precious Stone.
2. Precious Stone 
3. Organic Gems
நவரத்தினம் என 9 வகையான கற்களை நாம் உபயோகிக்கிறோம். மேலை நாடுகளில் 1. வைரம் 2. மாணிக்கம் 3. புஷ்பராகம் , 4. மரகதம் 5. வைடூரியம் . இந்த ஐந்து வகையான கற்களை விலைமதிப்புமிக்க தரமான கற்களாக (International Standard) (Super Precious) என அங்கீகரித்துள்ளார்கள். 128 - க்கும் மேற்பட்ட கற்கள் உலகின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கற்கள் தவிர மற்றவை Precious Stones  இரத்தினங்களாக மதிப்பீடு செய்கிறார்கள்.
இது உயிருள்ளவையாக கருதப்படுகிறது. 1. Pearl - முத்து,    2. Coral - பவளம்,    3. Amber - ஆம்பர்,   4.Tabasheer – மூங்கில்,   5. Ivory - யானை தந்தம்.

Weight:

முந்தைய காலத்தில் கற்களை குன்றிமணி கொண்டு அளந்து வந்தனர். சில இடங்களில் தோலா முறையை பின்பற்றுகின்றனர்.
1. THOLA - 58.18 Carats
1913 - ல்  இங்கலாந்தில் கற்களை அளவீடு செய்வதற்கு காரட் "Carat “ என்ற முறையை சட்டமாக கொண்டு வந்தது.
1. Carat - 0.20 mgm 
1. Gram - 5 Carat
என்பது கற்களின் எடையை  அளவீடு செய்யும் முறை.
"Karat"
என்பது தங்கத்தின் தரத்தை அளவீடு செய்யும் முறை. இரண்டும் வேறு வேறு. இதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். சொக்கத் தங்கம் என்பது
24 "Karat" 0.999 Finess
100*22
22 Karat = ----- = 91.6%
தங்கம் 
           24
8.4%
செம்பு கலந்திருக்கும்.
"Carat" -
கற்களின் எடை 
"Karat" -
தங்கத்தின் தரம்
கற்களின் கடினத்தன்மை பூமியிலிருந்து கிடைக்கும் கனிமங்களை (Minerals) கடினத்தன்மையைக் (Hardness) கொண்டு தரம் பிரிக்கின்றனர். அந்த கடினத்தன்மையின் பட்டியலில் சரிபார்த்து அதன் உட்பிரிவுகளாக பெயரிடப்படுகின்றது.
Diamond  
10
வைரம்
Corundum  
9
கொரண்டம்
Topaz    
8
டோபாஸ்
Quartz   
7
குவார்ட்ஸ்
Feldspar  
6
பெல்ட்ஸ்பார் (Moon Stone, Sun Stone)
Apatite  
5
அப்படைட்
Fluoride  
4
புளோரைட்
Calcite  
3
கால்சைட்
Gypsum  
2
ஜிப்சம்
Talc       
1
டால்க

உதாரணத்திற்கு ஒரு கனிமத்தின் கடினத்தன்மையை (Hardness) 9 என்றால் அதை கொரண்டம் (Corundum) என்று முதலில் பிரிப்பார்கள். பிறகு அதன் கனிமத் தன்மைகளில் சேர்க்கை மற்றும் சிலவற்றை ஆராய்ந்து அது மாணிக்கமா அல்லது புஷ்பராகமா என பெயரிடுவார்கள்.


வைரம்

ஒப்படர்த்தி - 3.52 கடினத்தன்மை 10, ஒளிவிலகல் - 2.42
இரத்தினகளில் தலை சிறந்து விலங்குவதும் உலகில் உள்ள பொருட்களில் அதிக கடினத்தன்மை கொண்டதும் வைரம் ஆகும். வலிமைக்கும், உறுதிக்கும் முன்பிருந்தே வைரத்தை உதாரணமாகக் காட்டினார்கள். வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்கமுடியும்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அளவிட முடியாத உயர் வெப்பதினால் (1500°-1800°) பூமிக்குள் மிகவும் அதிக ஆழத்தில் உயர் அழுத்தத்தினால் கரி துண்டுகளாக (Carbon) மாறின. இதுவே வைரம் பூமியில் துளையிட்டு அதிக ஆழத்தில் இருந்து மண், கல், எடுத்து அதில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. சில இடங்களில் ஆறுகள், கடற்கரை மற்றும் கடலிலும் கிடைக்கின்றது. இந்தியாவில் வைரம் முதலில் கோல்கொண்டா அருகில் உள்ள கோலாரிலும் பின்பு மத்திய பிரதேசத்தில் பன்னா மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலும் கிடைத்தது. இந்தியாவில் அரசு நிறுவனம் National Mineral Development Corporation சுரங்கத்திலும் வைரம் தோண்டி எடுக்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள பத்து வைரச் சுரங்கங்களிலும் (Kimberley Mines உட்பட  De Beers Consolidated Mines Ltd) வைரம் தோண்டியும், துளையிட்டும் குழாய் மூலமாகவும் எடுக்கப்படுகின்றது.
Namibia உள்ள வடக்கு Orange River பகுதிகளில் Consolidated Diamond Mines Ltd எடுத்துக் கொண்டுள்ளது. Botswana - வில் உள்ள வைரச் சுரங்கத்தை Botswana அரசும் Debeers  நிறுவனமும் சரிபாதி விகிதத்தில் சேர்ந்து சுரங்கம் தோண்டி எடுக்கப்படுகின்றது.
வைரம் முழுவதும் கார்பன் (99.95) என்ற கரிப்பொருளால் ஆனது. இரத்தினங்களில் மிக முக்கியமானதாக கூறப்படுவது வைரம். வைரத்தில் மிகவும் பெரிய அளவு மிகவும் அரிதாக கிடைக்கின்றது. சிறிய அளவுள்ள கற்கள் (Small Size) அதிகம் கிடைக்கின்றது. வைரத்தை சுரங்கங்களில் இருந்து எடுத்து 1.இரத்தினத்தரம் 2.இரத்தினங்களுக்கு நெருங்கிய தரம். 3.இயந்திர தரம் என்று 3 வகையாக பிரிக்கப்படுகின்றது. இதில் இரத்தின தரம் ஆபரணங்களுக்கு மெருகேற்றி உபயோகப்படுத்தப்படுகிறது. 60% முதல் 80% வரை இயந்திர உபயோகத்திற்கு பயன்படுகிறது. வைரத்தை கீழ்கண்ட 9 வகைகளை வைத்து விலை நிர்ணயம் செய்கின்றனர்.
1. Carat 2.   Cut 3.   Clarity   4.Color   5.Observation Power.   6. Vibration Power.   7. Vocal Length    8. Luxor    9. Circle.
1. Carat (Weight): வைரத்தின் எடை எந்த அளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவு விலை மாறுபடும். வைரத்தின் எடையும், உருவமும் விலையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
2. Cut: மெருகு ஏற்றப்படுவதிலும், பட்டைகள் வெட்டப்படுவதிலும் தரம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
3. Clarity: வைரத்தில் உள்ள புள்ளி, கீரல்கள் (Inclusions) அதன் ஒளிவிடும் தன்மையை மாறச் செய்யும் (Lusture) வைரத்தில் உள்ள சுத்தத்தைப் பொருத்து அதன் விலை மாறுபடும்.
4. Coluor: வைரத்தில் நிறமில்லாமல் (Colourless) கிடைப்பது மிகவும் அரிது. வைரத்தின் நிறத்தை சூரிய வெளிச்சத்தில் வைத்தே முடிவு செய்வார்கள். (Natural Days Light) நிறத்தை பொருத்தும் (5, 6, 7, 8) விலை மாறுபடும். ஹாலந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் அதிகம் பட்டை தீட்டப்படுகின்றது. மற்றும் பெல்ஜியம், இந்தியா, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலும் பட்டை தீட்டப்படுகின்றது.
5. Observation Power.  6. Vibration Power.  7. Vocal Length   8.Luxor  9.Circle.   என இவற்றை பொருத்து.
வைர விற்பனை மற்றும் மெருகேற்றுவதில் இந்தியாவில் குஜராத்தில் உள்ள சூரத் உலக புகழ் பெற்றது. சூரத்தில் உள்ள Indian Diamond Institute, Gov.of India மற்றும் The Gem & Jewellery Export Promotion Council மூலம் இயங்கும் இந்த நிறுவனம் வைரம் (Raw Material) பிரித்தல் முதற்கொண்டு Rough Diamond Assortment, Bruting, Polishing, Cutting Sawing Polished Diamond Grading International Grading அனைத்து பயிற்சிகளையும் அளித்து கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிண்டி தொழில் மையத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மாணிக்கம் (RUBY)

ஒப்படர்த்தி - 4,00 கடினத்தன்மை - 9 ஒளிவிலகல் - 1.76-1.78
மாணிக்கம் என்பது அலுமினியம் ஆக்சைடின் கூட்டுப் பொருள். கொரண்டம் (Corundum) வகையைச் சேர்ந்தது. நிறம் இல்லாதது. இதில் சிறிதளவில் குரோமியம் சேர்வதாலேயே நல்ல வளமான சிகப்பு நிறத்தை தருகிறது. சிறந்த தரமான மாணிக்கம் புறா ரத்த நிறத்தில் இருக்கும். மாணிக்கம் இந்தியாவில் மற்ற நாடுகளிலும் நிறைய கிடைக்கின்றது. அதிகம் (Opaque) ஒளிபுகா இயந்திர வகை தரம் கிடைக்கின்றது. இவை இயந்திர உபயோகத்திற்காக பயன்படுகிறது. பர்மாவிற்கு அடுத்தப்படியாகத் தாய்லாந்து, ஸ்ரீலங்கா, கென்யா ஆகிய பகுதிகளில் கிடைக்கின்றது. மாணிக்கம் பெரும்பாலும் ஆறுகளிலும் நிலத்துப் படுகைகளிலும் நிலம் தோண்டும் போதும் கிடைக்கின்றது.
அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம்

நட்சத்திர மாணிக்கம் (Star Ruby)

இது அனைத்து கற்களையும் போல் மெருகேற்றப்படுவதில்லை. மொலுக்கப்படுகின்றது. (Cabochon) இதை மொலிக்கி மெருகேற்றியபின் நன்றாக பார்த்தால் மேலே 6 கோடுகள் (6 Ray Star) நன்கு தெரியும்.
இதை நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள், தளத்திலேயே (Raw Material) 6 நூல் கோடுகள் வருமா, வராதா எந்த அளவு வரும் என்று பார்த்துக் கூறிவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் நாமக்கல், கரூர் மாவட்டத்திலும் அதன் சுற்றுப் பகுதுகளிலும் கர்நாடகாவில் அலிப்பூர், மாதேஸ்வரன் மலை, தாளவாடி பகுதிகளிலும் கிடைக்கின்றன. இங்கு அதிகம் இயந்திர உபயோகத்திற்கான தரமே கிடைக்கின்றது. சில கற்களே சிறந்த மணிக்கமாக கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் நட்சத்திர மாணிக்கம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கரூர் பகுதிகளிலும் கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: பர்மா, சைனா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கென்யா, இலங்கை, அமெரிக்கா, இந்தியா.
அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம்

மரகதம் (Emeralds)

ஒப்படர்த்தி - 2.71 கடினத்தன்மை -7.5 ஒளிவிலகல் - 1.57
மரகதம் பெரிலியம், அலுமினியம் சிலிகேட் சேர்ந்த ஒரு கூட்டுக்கலவை ஆகும். இது பெரில் (Beryl) வகையைச் சேர்ந்தது. இதில் குரோமியமும் சில இரும்புக் கலவைகளும் சேரும் போது பச்சை நிறத்தைத் தருகின்றது. மரகதத்தில் சிறந்த தரம் மிக அரிதாகவே கிடைக்கின்றது.
கொலம்பியாவில் உள்ள ஜிவோர் முசோ  சுரங்கத்தில் கிடைக்கும் மரகதம் உலக அளவில் முதல் தரமாக மதிக்கப்படுகின்றது. குரோமியம் சேர்வதன் அளவு மாற மாற மஞ்சள் கலந்த பச்சையாகவும், வெளிர் பச்சையாகவும் மாறும். மரகதம் கிடைக்கும் இடங்களைப் பொருத்து நிறைய வேறுபாடுகள் கொண்டுள்ளது.

        
கிடைக்குமிடங்கள்: கொலம்பியா, அமெரிக்கா, நார்வே, ஆஸ்திரியா, பிரேசில், ஜாம்பியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாபே, டேன்சேனியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, சிபேரிய, யூரல் மலைப்பகுதிகள்.
அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம்

புஷ்பராகம் (Sapphire)

ஒப்படர்த்தி - 4.00 கடினத்தன்மை -9.00 ஒளிவிலகல் - 1.76-1.78       
புஷ்பராகம் அலுமினியம் ஆக்சைடினால் ஆன கலவை. இது கொரண்டம் வகையைச் சார்ந்தது. அவை ஒவ்வொன்றும் அதன் நிறம் தரும் கூட்டுக்கலவை (Chemical Compound) மாறுபடுவதாலேயே வெவ்வேறு நிறமாக உள்ளது.

கனக புஷ்பராகம் - (மஞ்சள்)
 (Yellow Sapphire)       

மஞ்சள் நிறம் கொண்ட புஷ்பராகம் கனக புஷ்பராகம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் நிறம் வெளிர்மஞ்சள், வெளிர் பச்சை கலந்த மஞ்சள், சிறந்த மஞ்சள் (Dark) நிறங்களில் கிடைக்கின்றது. இலங்கையில் மஞ்சள் புஷ்பராகம் கிடைக்கின்றது. இதை பேன்ஸி என்றும் புக்கராஜ் (Hind) என்றும் கூறுகின்றனர். புஷ்பராகம் பெரிய அளவு கொண்ட நல்ல தரமான உண்மையான நிறம் கொண்டது. இன்று நல்ல விலை போய்க் கொண்டுள்ளது. இப்போது உண்மையான நிறம் (Original Colour) கொண்ட புஷ்பராகம் நல்ல தரம் கிடைப்பது குறைந்து விட்டது.

நீல புஷ்பராகம் (Blue Sapphire)

புஷ்பராகத்திற்கு நீல நிறம் டைட்டானியம் மற்றும் இரும்பு கலவை சேரும் போது கிடைக்கின்றது. இதில் பர்மா மற்றும் இலங்கையில் கிடைக்கும் நீலம் மிகவும் சிறப்புத் தன்மை வாய்ந்தது. நல்ல விலை போய் கொண்டுள்ளது. நீல மணிகளிலே மிகவும் சிறந்தவைகளாக      நீல புஷ்பராகம் விளங்குகின்றது.

நட்சத்திர நீல புஷ்பராகம் 
(Star Blue Sapphire)

இவை மொலுக்கப்படுகின்றது (Cobochon). இவ்வகையில் நல்ல 6 நூல் கொண்ட சிறந்த நிறம் கொண்டவை. நல்ல விலை போய்க் கொண்டுள்ளது. மேலை நாடுகளில் இதற்கென்று தனிவிலை உள்ளது. (Fancy Price).

வெண் புஷ்பராகம்
(White Sapphire)

இது நிறமில்லாதது (Colourless) வைரத்தை விட (Less Brilliant) குறைந்த பளபளப்புள்ளது. முன்பு இதை வைரம் என்றே உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். பின்பு தான் Scientific Method மூலமாக பரிசோதித்து வெண் புஷ்பராகம் என்று கண்டுபிடித்தனர்.

ஊதா புஷ்பராகம்
(Violet Sapphire)

இது நீல ஊதா, சிகப்பு ஊதா, வெளிர் சிகப்பு ஊதா போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. இதை இந்திர நீலம் என்று குறிப்பிடுகின்றனர்.
அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம்

வெளிர் சிகப்பு புஷ்பராகம் 
(Pink Sapphire)

இது வெளிர் சிகப்பு நிறம் கொண்டது. இதை உலக அளவில் "Lotus Colour" என்று கூறுகின்றனர். இதை "பதுமராகம்" என்று தமிழில் கூறுகின்றனர். இது கிடைப்பது அரிது.

பச்சை புஷ்பராகம் 
(Green Sapphire)

இது கொரண்டம் வகையிலேயே பச்சை நிறத்தை உடையது. 19-ஆம் நூற்றாண்டில் இதை உண்மையான மரகதம் என்றே விற்பனை செய்து கொண்டிருந்தனர். பின்புதான் இதைப் பச்சை புஷ்பராகம் என்று கண்டுபிடித்தார்கள். இது நல்ல பச்சைநிறம் கொண்டது. சில கற்களில் பச்சையுடன் நீலமும் மஞ்சள் நிறமும் கலந்து கிடைக்கின்றது. இது கிடைப்பது அரிது.
கிடைக்குமிடங்கள்: (Sapphire Varieties) பர்மா, இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, நிகேரியா, சைனா, கென்யா, டேன்சேனியா.
அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம்

aquamarine 

ஒப்படர்த்தி - 2.69 கடினத்தன்மை -7.5 ஒளிவிலகல் - 1.57
கடல்நீரைத் தூரமாகப் பார்த்தால் வெளிர் நீலம் கொண்டதாகத்  தெரியும். அதே நிறத்தில் உள்ளதால் இதற்கு அக்ரோ மரைன் என்று பெயர் பெற்றது. ஆகாய நீலத்தைப் போலவும், வெள்ளை கலந்த நீலமாகவும், சுத்த வெள்ளையாகவும் கிடைக்கின்றது. இது பெரில் (Beryl) வகையைச் சார்ந்தது. பச்சை நிறத்திலும், வெளிர் பச்சை நிறத்திலும் கிடைக்கின்றது. இந்த வகை கற்கள் சிறந்தவனவாகும் கடல் உபயோகப்படுத்துவதைவிட வெளிநாட்டினர் அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
கிடைக்குமிடங்கள்: பிரேசில், ரஷ்யா, யூரல் மலைப் பகுதிகள், சைனா, நாம்பிய, பாகிஸ்தான், டேன்சேனியா, இந்தியா, (தமிழ்நாட்டில் ஈரோடு, கரூர் மாவட்டம்).

Chrysoberyl Group 

ஒப்படர்த்தி - 37 கடினத்தன்மை -8.5 ஒளிவிலகல் - 1.74-1.75
Alexandrite:

இது பெரிலியம், அலுமினியம் ஆக்சைடால் ஆன கூட்டுக்கலவை. இரத்தினக் கற்களிலேயே மிகவும் வித்தியாசமானதும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் Alexandrite உள்ளது.
இது 1830-ஆம் ஆண்டு யூரல் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இளவரசர் அலெக்சாண்டர் (இரஷ்ய மன்னர்) பெயரால் விளங்குகின்றது. இது கிடைப்பது மற்றும் பெரிய அளவு கிடைப்பது மிக அரிது. இதற்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. வெளிநாட்டினர் நல்ல விலை கொடுத்து முதலீடு செய்கின்றனர். சூரிய ஒளியில் பாற்பதற்குப் பச்சை நிறமாகவும் மின்சார ஒளியில் (Synthetic Light) பார்ப்பதற்கு சிவப்பு நிறமாகவும் தெரியும்.
இதில் குரோமியம் ஆக்சைடின் சதவிகிதம் மாறமாற நிறம் மாறும் தன்மை, கூடவோ குறையாவோ செய்யும்.

வைடூரியம் (Cat`s Eye)

பூனையின் கண்ணைப் போல் உள்ளதால் இதற்கு Cat`s Eye என்று பெயர் வந்தது. இது பச்சை கலந்த மஞ்சள், மஞ்சள், தேன் கலந்த பழுப்பு நிறங்களில் கிடைக்கின்றது. சூரிய ஒளியில் அல்லது மின் ஒளியில் பார்த்தால் மெல்லிய கோடு தெரியும். Chrysoberyl வகையைச் சேர்ந்த வைடூரியத்தில் நிறம் மாறும் Alex Cat`s Eye-ம் உள்ளது. இது கிடைப்பது அரிது.
கிடைக்குமிடங்கள்: இந்தியாவில் திருவனந்தபுரம் பகுதி, ஒரிஸா, ஆந்திரா, இலங்கை, பிரேசில், டேன்சேனியா மற்றும் யூரல் மலைப்பகுதி.

ஜூர்கான் (Zircon)

ஒப்படர்த்தி - 4.5-4.7  கடினத்தன்மை -6.5/7.5  ஒளிவிலகல் - 1.92-2.02
இது ஜூர்கோனியம் சிலிகேட்டால் ஆனது. தோரியம் மற்றும் யுரேனியம் சேர்ந்த கூட்டுக்கலவை நிறமில்லாதது (Colourless). மற்றும் மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு, பழுப்பு, மஞ்சள் கலந்த பச்சை ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. வைரத்திற்கு மாற்றாக அதிகம் உபயோகிக்கின்றனர்.
 
கிடைக்குமிடங்கள்: பர்மா, ஆஸ்திரேலியா, பெர்த், பிரான்ஸ், இந்தியா, இலங்கை, தாய்லாந்து.

டோபாஸ் (Topaz)

ஒப்படர்த்தி - 3.50-3.50  கடினத்தன்மை -ஒளிவிலகல் - 1.62-1.64
அலுமினியம், புளுரோ, சிலிகேட்டுடன் சில ஹைட்ரோக்சைல் சேர்ந்த சேர்வை, நிறமில்லாதது. மற்றும் நீலம், பச்சை, மஞ்சள், சிவந்த மஞ்சள் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. நல்ல ஒளி விடக்கூடியது. அதிகம் கிடைப்பதில்லை. இன்று டோபாஸ் என்று நினைத்துக் கொண்டு நிறைய வேறுவகை கற்களை அணிந்து கொண்டுள்ளனர்.
கிடைக்குமிடங்கள்: மெக்சிகோ, பர்மா, யூரல் மலைப்பகுதி, ஜெர்மனி, நிகேரியா, நாம்பியா.

ஸ்பின்னல் (Spinel)

ஒப்படர்த்தி -3.60-3.70 கடினத்தன்மை -ஒளிவிலகல் - 1.71-1.75
ஸ்பின்னல் மாங்கனீசியம் மற்றும் அலுமினியம் ஆக்ஸைடு சேர்ந்த கலவையால் ஆனது. சிகப்பு, நீலம், ஊதா, பழுப்பு மற்றும் கரும்பச்சை நிறங்களில் கிடைக்கின்றது. இதை பாலாஸ் மாணிக்கம் (Balas Ruby) என்றும் NARAM (Hindi) என்றும் அழைக்கின்றனர்.
கிடைக்குமிடங்கள்: இலங்கை, தாய்லாந்து, பர்மா, ஆப்கனிஸ்தான்.

ஸ்பின் (Sphene)

ஒப்படர்த்தி -3.52-3.54 கடினத்தன்மை -5.5  ஒளிவிலகல் - 1.88-2.05
சிலிகேட்டுடன் டைட்டானியம் மற்றும் கால்சியம் கலவையால் ஆனது. இது மஞ்சள், பழுப்பு, பச்சை, பச்சை கலந்த நிறங்களில் கிடைக்கின்றது. நல்ல ஒளிவிடக் கூடியது. இதை Titanite என்றும் கூறுவர்.
கிடைக்குமிடங்கள்: பர்மா, பிரேசில், இலங்கை, இந்தியா(தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம்).

பெரிடாட் (Peridot)

ஒப்படர்த்தி - 3.34  கடினத்தன்மை - 6.5 - 7.00  ஒளிவிலகல் - 1.64 - 1.69
இது மாங்கனீசியம் மற்றும் இரும்பு சிலிகேட் சேர்ந்த கலவை. இது குடுவை பச்சை நிறம் (Bottle Green), மஞ்சள் கலந்த பச்சை, கருப்பு கலந்த  பச்சை நிறங்களில் கிடைக்கின்றது. நல்ல ஒளியுடன் கூடியது. இரும்பு கலந்த கலவையால் இந்த நிறம் கிடைக்கின்றது. இதை Zambardast என்று இந்தியாவில் அழைக்கின்றனர்.

துவரமல்லி (TOURMALINE)

ஒப்படர்த்தி - 3.06  கடினத்தன்மை - 7.5  ஒளிவிலகல் - 1.62 - 1.64
மற்ற இரத்தினங்களைக் காட்டிலும் அதிக நிறங்களில் துவரமல்லி (Tourmaline) கிடைக்கின்றது. இது போரோசிலிகேட்டின் பல பாகங்களைக் கொண்டது. இதில் ஒவ்வொரு வகைகளுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.
வெளிர் சிகப்பு
- (Rose)(Rubellite)
நீலம்
- (Indicolite)
நிறமில்லாதது
- (Achroite)
பிரவுன்
- (Dravite)
வயலட்
- (Siberite)
மஞ்சள், பச்சை, கருப்பு
- (Schorl)

மற்றும் துவரமல்லியில் ஒரே கல்லில் இரண்டு நிறம் மற்றும் மூன்று நிறம் உள்ள கல்லும் உள்ளது. இதற்கு பெயர் - Water - Melon Tourmaline.
இதில் நிறம் மாறும் (Colour Changing Variety) வகைகளும் உள்ளது.
கிடைக்குமிடங்கள்: (சிகப்பு) பர்மா, (பச்சை) பிரேசில், டேன்சேனியா, நாம்பியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, கென்யா, அமெரிக்கா, இந்தியா.

கார்னட் (Garnet Group)

ஆபரணத் தொழில்களிலும், இயந்திரத் துறைகளிலும் கார்னட் வகை நிறைய உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்வகை அதிகம் கிடைக்கின்றது. ஆபரணத்தில் மாலைகள், மோதிரக் கற்கள், அணிகலனில் பதிப்பதற்கும், சிலைகளாகவும் நிறைய பயன்படுத்துகின்றனர். கார்னட்டில் நிறைய வகைகள் உள்ளது.

1.பைரோப்கார்னட் (Pyrope Garnet)

ஒப்படர்த்தி - 3.70 – 3.90 கடினத்தன்மை – 7 - 7.55  ஒளிவிலகல் - 1.73 - 1.76
இது மாங்கனீசியம் அலுமினியம், சிலிகேட் ஆகிய சூட்டுக் கலவையில் ஆனது. இவ்வகை சிவப்பு மற்றும் இரத்த சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றது. இதில் சில வகையில் இரும்பும் சில வகையில் குரோமியமும் கலந்து இருக்கும். இவ்வகையில் (Inclusions) குறைவாக இருக்கும்.
கிடைக்குமிடங்கள்: கிம்பர்லி, தென் ஆப்பிரிக்கா வைரச் சுரங்கங்கள், ஆஸ்திரேலியா, பிரேசில், பர்மா, டேன்சேனியா.

2.அல்மன்டைன் கார்னட்

(Almandine Garnet)

ஒப்படர்த்தி - 3.90-4.20 கடினத்தன்மை - 7.5  ஒளிவிலகல் - 1.76 - 1.81
இது அலுமினியம், இரும்பு, சிலிகேட் சேர்ந்த கலவை. இவ்வகை கற்கள் கருஞ்சிவப்பு நிறத்தை கொண்டது. இவ்வகைக் கற்களை ஆபரணங்களில் நிறைய பயன்படுத்துகின்றனர்.
கிடைக்குமிடங்கள்: ஆஸ்திரேலியா, டேன்சேனியா, இந்தியா, இலங்கை.

3.Spessartine Garnet

ஒப்படர்த்தி - 4.16 கடினத்தன்மை - 7.00  ஒளிவிலகல் - 1.76 - 1.80
இது மாங்கனீஸ் மற்றும் அலுமினியம் சிலிகேட்டால் ஆனது. இந்த வகை கார்னட் ஆரஞ்சு கலந்த பிங்க், ஆரஞ்சு கலந்த சிகப்பு, சிகப்பு கலந்த பிரவுன், பிரவுன் கலந்த மஞ்சள் நிறத்தில் கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா,(நியூ சவூத் வால்ட்ஸ்), பர்மா, பிரேசில், யூரல் மலைப்பகுதி மற்றும் அமெரிக்கா.

4.Hessonite Garnet

ஒப்படர்த்தி - 3.65 கடினத்தன்மை - 7.1/4 ஒளிவிலகல் - 1.74 - 1.76
இது தேன் நிறம் கலந்த மஞ்சள், ஆரஞ்சு கலந்த சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள் கலந்த பிரவுன் நிறத்தில் கிடைக்கிறது. இதுவே அனைவரும் அணியும் கோமேதகம் (Gomed).
கிடைக்குமிடங்கள்: இலங்கை, இந்தியாவில் (ஒரிசா, தமிழ்நாடு).

5.Rhodolite Garnet

ஒப்படர்த்தி - 3.74 கடினத்தன்மை - 7 - 7.5 ஒளிவிலகல் - 1.755 - 1.765
இது சிறந்த வெளிர் சிகப்பு மற்றும் அடர்ந்த சிகப்பு நிறங்களில் கிடைக்கின்றது. (Pink and pinkish Red)  இது நல்ல ஒளி விடக்கூடியது.
கிடைக்குமிடங்கள்: அமெரிக்கா, ஜிம்பாபே, டேன்சேனியா, இலங்கை. (அதிகம் கிடைப்பதில்லை).

6.Demantoid Garnet

ஒப்படர்த்தி - 3.85 கடினத்தன்
மை - 6.5 ஒளிவிலகல் - 1.53 - 1.55
இது சிலிகேட்டால் ஆன அலுமினியம் மாங்கனீசியம் சேர்ந்த கலவை. இது பச்சை நிறத்தை கொண்டது. குரோமியம் சேர்வதனால் இது பச்சை நிறமாக உள்ளது. Semi Precies Stone  வகைகளிலேயே அதிக விலை கொண்டது. வைரத்தைப் போல நல்ல ஒளிவிடக்கூடியது.
கிடைக்குமிடங்கள்: இலங்கை, கொரியா, ரஷ்யா.

காக்கை நீலம் (IOLITE)

ஒப்படர்த்தி - 2.57 - 2.66  கடினத்தன்மை - 7.0 ஒளிவிலகல் - 1.53 - 1.55
இது சிலிகேட்டால் ஆன அலுமினியம், மாங்கனீசியம் சேர்ந்த கலவை. இதை காக்கை  நீலம் என்று கூறுகின்றனர். இது ஒருபுறம்  பார்த்தால் சாம்பல் கலந்த வெண்மைநிறம், மறுபுறம் நீல நிறமாகவும் தெரியும்.  
கிடைக்குமிடங்கள்: இலங்கை, பர்மா, இந்தியாவில் ஒரிஸா, தமிழ்நாடு இப்போது சிறந்த கற்கள் நாம்பியாவிலும் டேன்சேனியாவிலும் கிடைக்கின்றது.

KYANITE

ஒப்படர்த்தி - 3.69 கடினத்தன்மை - 4-7 ஒளிவிலகல் - 1.71 - 1.73
இது அலுமினியம் சிலிகேட் கலந்த கலவை. நீலம் பச்சை மற்றும் நிறமில்லாத நிறங்களிலும் கிடைக்கின்றது. இதன் கடினத்தன்மை ஒரு பகுதி 4-ம் மற்றொரு பகுதி 7-ம் கொண்டது. நல்ல ஒளிவிடக் கூடியது.
கிடைக்குமிடங்கள்: சுவிட்சர்லாந்து, கென்யா.
அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம்

QUARTZ GROUP

ஸ்படிகம் (
Crystal)

ஒப்படர்த்தி - 2.65 கடினத்தன்மை - 7.00 ஒளிவிலகல் - 1.54 - 1.55
ஸ்படிகம் என்பது முழுவதும் சிலிக்காவால் ஆனது. இது நிறமற்றது. பெரிய அளவுகளிலும் கிடைக்கின்றது. ஸ்படிகம் அதிகமாகக் கிடைக்கின்றது. இதில் மாலை அனைவரும் விரும்பி அணிகின்றனர். ஸ்படிகம் குளிர்ச்சியை தரக்கூடியது. அணிவது மிகவும் நல்லது. நல்ல ஸ்படிகமாக தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.
ஸ்படிகத்தில் சிலைகள், பிரமிடு, மகாமேரு, விநாயகர், லிங்கம், புத்தர் மற்றும் பல உருவங்கள் செய்கின்றனர். தியானங்களுக்கு ஸ்படிகம் நிறைய பயன்படுத்துகின்றனர். நூல் கொண்ட நட்சத்திர ஸ்படிகம் அரிதாக கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: அதிகமாக பிரேசிலில் கிடைக்கின்றது. இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா, ஆந்திரா, கர்நாடகப்பகுதிகள், ஜப்பான், மடகேஸ்கர்,சுவிட்சர்லாந்து.

ஓபல்(OPAL)

ஒப்படர்த்தி - 2.10 கடினத்தன்மை - 6.00   ஒளிவிலகல் - 1.45 சராசரி
ஓபல் சிலிக்கவும், நீரும் (Water) சேர்ந்து உருவான கலவை. இது வெள்ளை, கருப்பு தீ நிறம் (Fire) மற்றும் வெள்ளை (Water Opal) கிடைக்கின்றது. ஓபலில் வானவில்லைப் போல நிறம் மாறிமாறித் தெரியும் (Play of Colours). Fire Opal என்பது தீ எரியும்போது சிகப்பு நிறம் எவ்வளவு பிரகாசமாக தெரியுமோ அதுபோல் ஒளிவீசக்கூடியது. இதை வடமொழிச் சொல்லால் விலை உயர்ந்த "உப் ஆலா" என்று கூறுவார்கள்.
கிடைக்குமிடங்கள்: ஆஸ்திரேலியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாபே, அமெரிக்கா.

செவ்வந்தி (AMETHYST)

ஒப்படர்த்தி - 2.65 கடினத்தன்மை - 7.00    ஒளிவிலகல் - 1.54 - 1.55
சிலிக்காவால் ஆனது. இது செவ்வந்திப் பூவின் நிறத்தை கொண்டுள்ளதால் செவ்வந்தி கல் என்று கூறுவார்கள். இது Bluish-Purple, Reddish-Purple, Whitish-Purple நிறத்தில் கிடைக்கின்றது. இதில் சிறந்த கல் மெருகேற்றப்பட்ட பிறகு பார்ப்பத்தற்கு மிக அழகாக இருக்கும். அதிகம் கிடைக்கக்கூடியது.
கிடைக்குமிடங்கள்: யூரல் மலைப்பகுதிகள், (Reddish Amethyst), ஜெர்மனி, நாம்பியா, மேற்கு ஆஸ்திரேலியா, ஜாம்பியா, இந்தியா, பிரேசில்.

காப்பி நிறம் Brown Quartz (Smokey)

ஒப்படர்த்தி - 2.65 கடினத்தன்மை - 7.00   ஒளிவிலகல் - 1.54 - 1.55
இது காப்பிக் கொட்டையின் நிறத்தைக் கொண்டது. சிலிக்காவால் ஆனது. இது மஞ்சள் கலந்த பிரவுன், புகை படிந்த பிரவுன், வெளிர் பிரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: ஆஸ்திரேலியா, ஜப்பான் ஸ்பெயின், இந்தியா, அமெரிக்கா.

மஞ்சள் படிகம் (
Citrine Quartz)

ஒப்படர்த்தி - 2.65 கடினத்தன்மை - 7.00   ஒளிவிலகல் - 1.54 - 1.55
இது சிலிக்காவால் ஆனது. சிலிக்காவுடன் இரும்புக் கலவை சேர்வதனால் இந்த நிறத்தை தருகின்றது. இது மஞ்சள் நிறம் கொண்டது. வெளிர் மஞ்சளாகவும், பழுப்பு கலந்த மஞ்சளாகவும் கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: பிரேசில், பிரான்ஸ், மடகாஸ்கர், மற்றும் அமெரிக்கா.

(ROSE QUARTZ)

ஒப்படர்த்தி - 2.65 கடினத்தன்மை - 7.00   ஒளிவிலகல் - 1.54 - 1.55
இது சிலிக்காவால் ஆனது. இதைப் புள்ளி உள்ள கற்கள் (Spotted Stone) என்ற மொழியில் கூறுவார்கள். பச்சை நிறக் கல்லில் சிகப்பு புள்ளிகள் உள்ளதால் (Blood Stone) என்று கூறுகின்றனர். சிகப்பு கலந்த சாம்பல் நிறம், சாம்பல், பச்சை வகைகளில் கிடைக்கின்றது. இதன் மஞ்சள் சிகப்பு நிறம், இரும்பு ஆக்ஸைடு மற்றும் பச்சை குளோரைடுடன் ஆக்டினோலைட் கலவை சேர்வதனால் கிடைக்கின்றது. இது ஒளிபுகா வகையை (Opaque) சார்ந்தது.
கிடைக்குமிடங்கள்: இந்தியா, கலிபோர்னியா மற்றும் அமெரிக்கா.

புலிக்கண் வைடூரியம் (Tiger`s Eye)

ஒப்படர்த்தி - 2.65 கடினத்தன்மை - 7.00 ஒளிவிலகல் - 1.54 - 1.55 சராசரி
Tiger`s Eye என்பது புலிக்கண்ணைப் போல் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இது சிலிக்காவால் ஆனது. இதில் பழுப்பு இரும்பு ஆக்ஸைடு கலந்துள்ளதால் தங்க பழுப்பு நிறத்தைத் தருகின்றது. இதன் விலை மிகக் குறைவே.
கிடைக்குமிடங்கள்: தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பர்மா.

QUARTZ CAT`S EYE

ஒப்படர்த்தி - 2.65 கடினத்தன்மை - 7.00 ஒளிவிலகல் - 1.54 - 1.55 சராசரி
இது சிலிக்காவால் ஆனது. வெள்ளை நிறத்திலும், வெளிர் ,   சாம்பல்,   சாம்பல் கலந்த பச்சை நிறத்திலும் கிடைக்கின்றது. இதிலும் பூனைகண்ணைப் போல் அடர்த்தியான கோடுகள் இருக்கும். விலை குறைவே.
கிடைக்குமிடங்கள்: இந்தியா, இலங்கை மற்றும் ஜெர்மனி.

பச்சைப்படிவம் "Aventurin Quartz"

கல்பச்சை "Indian Jade"

ஒப்படர்த்தி - 2.65 கடினத்தன்மை - 7.00 ஒளிவிலகல் - 1.54 - 1.55 சராசரி
இது சிலிக்காவால் ஆனது. மைக்காவின் நிறத்தைப்  பொருத்து இது வேறுபடும். இதில் வெள்ளைப் புள்ளிகள் இருக்கும். பச்சை நிற அவஞ்சரின் பச்சை மைக்காவால் ஆனது. பழுப்பு கலந்த சிகப்பும், வெள்ளை கலந்த நீலமும், நீலம் கலந்த பச்சையும் உள்ளது. இது சிலைகள் செய்யவும், மாலைகள் செய்யவும் பயன்படுகிறது. மொத்தமாகக் கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: இந்தியா, பிரேசில், சிபேரியா, டேன்சேனியா.

CARNELIAN

ஒப்படர்த்தி - 2.60 கடினத்தன்மை - 7.00 ஒளிவிலகல் - 1.54 சராசரி
இது சிலிக்காவால் ஆனது. Chalcedony என்ற வகையில் ஒளிப்புகக்கூடிய (Transparent) வகையைச் சார்ந்தது. இதில் இரும்பு ஆக்ஸைடு கலவை சேர்வதாலேயே சிகப்பு நிறத்தைத் தருகின்றது. மாலைச் செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கிடைக்குமிடங்கள்: பிரேசில், சைனா, எகிப்து மற்றும் இந்தியா,

AGATE

ஒப்படர்த்தி - 2.60 கடினத்தன்மை - 7.00 ஒளிவிலகல் - 1.54
அகேட் வகை சிலிக்காவால் ஆனது. இதில் மரம் போன்ற தோற்றம் உட்கொண்ட கல்லை மாஸ் அகேட் (Moss Agate) "Mocha Stone" என்று பெயர். இதில் கருப்பு நிறத்தை ஒத்த தோற்றம் குளோரைடு சேர்வதனாலும், சிவப்பு நிறத் தோற்றம் இரும்பு கலந்த கலவை சேர்வதனாலும் தருகின்றது. அதிகமாகக் கிடைக்கின்றது. இதில் பிளேட், பேப்பர் வெயிட், பெட்டிகள், டம்ளர் செய்யப்படுகின்றது.
கிடைக்குமிடங்கள்: பிரேசில், எகிப்து, ஸ்காட்லேண்டு, சிறந்த பச்சைமாஸ்

அகேட் இந்தியா.
SARDONYX, ONYX

ஒப்படர்த்தி - 2.60 கடினத்தன்மை - 7.00 ஒளிவிலகல் - 1.54 இடையில்
இது சிலிக்காவால் ஆனது. இதில் வெள்ளை நெர்க்கொடுகள் பழுப்பு மற்றும் சிகப்பு கலந்த கோடுகள் இருக்கும். கருப்பு,   பிரவுன் மற்றும் வெள்ளை கலந்த கோடுகளாகவும் இருக்கும். இது பச்சை நிறத்திலும் உள்ளது.
கிடைக்குமிடங்கள்: பிரேசில்.

TURQUOISE

ஒப்படர்த்தி - 2.60 - 2.80 கடினத்தன்மை - 6.00 ஒளிவிலகல் - 1.64 இடையில்
இது ஹைட்ரோ பாஸ்பேட் உடன் காப்பர் மற்றும் அலுமினியம் சேர்ந்த கலவை. இதை பிரோசா என்று கூறுகின்றனர். இதில் காப்பர் மற்றும் இரும்பு கலவை சேர்வதால் நீலநிறத்தைத் தருகின்றது. இது Cabochon வகையில் மொலுக்கி அணியப்படுகின்றது. இவ்வகையில் போலிகள் அதிகம் உள்ளன. நீலம், ஆகாய இளைய நீலம், பச்சை கலந்த சாம்பல், பச்சை கலந்த நீல நிறங்களில் கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: ஆகாய நீலம் - ஈரான், திபெத், பச்சை, நியூமெக்சிகோ, ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா.

DAIOPSIDE

ஒப்படர்த்தி - 3.19  கடினத்தன்மை - 5.00 ஒளிவிலகல் - 1.67 - 1.70
இது கால்சியம் மாங்கனீசியம் சிலிகேட்டுடன் சில இரும்பு தாது மாங்கனீசியம் கலந்த கலவை. இது அதிகமாகக் கருப்பு, கரும்பச்சை, வெளிர் பச்சை, நிறமில்லாதது. பழுப்பு கலந்த பச்சை, ஊதா கலந்த நீல நிறங்களில் கிடைக்கின்றது. இதில் அடர்த்தியான கற்கள் அதிகம். கருப்பு நிறங்களில் இருக்கின்றது.
இதில் அதிக இரும்புச் சத்தும், குறைந்த மாங்கனீசும், கலந்திருக்கும். இதில் 6 நூல் (6 Rays Star), 4 நூல் Diopsite உள்ளது. இவை பழுப்பு கலந்த கருப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: இலங்கை, ஜீபேரியா, பாகிஸ்தான், கனடா, பர்மா, இந்தியா. Kimberly Diamond Mine South Africa.

JADEITE

ஒப்படர்த்தி - 3.30 - 3.50    கடினத்தன்மை - 6.5 - 7.00 ஒளிவிலகல் - 1.66 இடையில்
இது சோடியம், அலுமியம் சிலிகேட்டால் ஆனது. இது அடர்ப்பச்சை (Imperial Green) மற்றும் வெளிர்பச்சை விலை உயர்ந்தது. இவ்வகைக்கு Jadeite என்று பெயர். மற்றும் வெள்ளை, வெளிர் சிகப்பு, பிரவுன், சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தில் கிடைக்கின்றது.  மாங்கனீஸ் கலவை சேரும் அளவைப் பொருத்து இந்த நிறம் கிடைக்கின்றது. இரும்பு கலவை சேரும்போது வெளிர் பச்சை Jadeite ஆகக் கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: பர்மா, கலிபோர்னியா, மற்றும் ஜப்பான்.

ENSTATITE CAT`S EYE

ஒப்படர்த்தி - 3.27   கடினத்தன்மை - 5.5 ஒளிவிலகல் - 1.66 - 1.67
இது மாங்கனீசு மற்றும் இரும்பு சிலிகேட் கலந்த கலவை.  பச்சை மற்றும் நீலம் பழுப்பு கலந்த நீல நிறங்களில் கிடைக்கின்றது. இதில் வைடூரியம் போன்று கோடு இருக்கும். (Cat`s Eye Effect).
கிடைக்குமிடங்கள்: தென் ஆப்பிரிக்கா, (கிம்பர்லி வைரச் சுரங்கம்), பர்மா, நார்வே, கலிபோர்னியா, இந்தியா(தமிழ்நாடு).

FELDSPAR GROUP

சூரிய காந்த கல் "SUN STONE"

ஒப்படர்த்தி - 2.64  கடினத்தன்மை - 6.00- 6.5  ஒளிவிலகல் - 1.54
இது சோடியம், கால்சியம், அலுமினியம், சிலிகேட்டின் கூட்டுக்கலவை. சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தில் கிடைக்கின்றது. இதில் உள்ள புள்ளிகள் பொன் நிறத்தில் எதிரொளிக்கும் தன்மை கொண்டது. சுத்தமாக சிறந்த முறையில் தரமுள்ள கற்கள் குறைவாக கிடைக்கின்றது. இது (Opaque) ஒளிபுகாத வகையைச் சார்ந்தது. இது Cabochon வகையில் மெருகேற்றப்படுகிறது.
கிடைக்குமிடங்கள்: இந்தியாவில், தமிழ்நாடு, ரஷ்யாவில் லேக் பைகாய், அமெரிக்கா.

சந்திரா காந்தக் கல் “MOON STONE”

ஒப்படர்த்தி - 2.57  கடினத்தன்மை - 6.00- 6.5  ஒளிவிலகல் - 1.53
இது சோடியம், பொட்டாசியம், அலுமினியம், சிலிகேட் கலந்த கலவையால் ஆனது. நிலாவைப் போல் உள்ளதால் இது MOON என்று பெயர் பெற்றது. இதில் ஒளி புரளும் கோடுகள் (Silky Luster) தெரியும். இவ்வகையில் 6 நூல், 4 நூல் உள்ள கற்களும் உள்ளன. இது வெள்ளை, வெளிர் மஞ்சள், மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு, கருப்பு நிறங்களில் கிடைக்கின்றது. மற்றும் வெள்ளை நிறத்தின் மேல் வானவில் நிறம் தெரியும் (Play of Colours) வகையில் Rainbow Moon Stone கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: இந்தியா (தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள்), இலங்கை, பர்மா.

“LABRADORITE”

ஒப்படர்த்தி - 2.70  கடினத்தன்மை - 6.00- 6.5  ஒளிவிலகல் - 1.57
இது கால்சியம் மற்றும் அலுமினியம், சிலிகேட்டால் ஆன கலவை. இது நல்ல சிறந்த நிறம் மாறக்கூடிய (Play of Colours) தன்மை கொண்டது. நீலம், பச்சை, சிகப்பு, மஞ்சள், ஊதா நிறம், நல்ல சாம்பல் மற்றும் கருப்பு நிறத்தின் பின்னணியில் மாறக்கூடியது. இது மெருகேற்றிய பிறகு Cabochon Polish நிறம் மாறுவது நன்கு தெரியும்.
கிடைக்குமிடங்கள்: மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, யூரல் மலைப்பகுதி, இந்தியா மற்றும் அமெரிக்கா.

"FLUORITE OR FLUORSPAR"

ஒப்படர்த்தி - 3.18 கடினத்தன்மை - 4 ஒளிவிலகல் - 1.43
இது பச்சை, மஞ்சள், பிரவுன், நீலம், ஊதா நிறங்களில் கிடைக்கின்றது. இது மெருகேற்றப்படும் போது நல்ல ஒளி இருக்காது.  நொறுங்கல் தன்மை கொண்டது.
கிடைக்குமிடங்கள்: சுவிட்சர்லாந்து, தமிழ்நாடு, கனடா, ஜெர்மனி, இத்தாலி, நார்வே மற்றும் அமெரிக்கா.

"Malachite"

ஒப்படர்த்தி - 3.18 கடினத்தன்மை - 4 ஒளிவிலகல் - 1.43
இது பச்சை, மஞ்சள், பிரவுன், நீலம், ஊதா, நிறங்களில் கிடைக்கின்றது. இது மெருகேற்றப்படும்போது நல்ல ஒளி இருக்காது. நொறுங்கும் தன்மை கொண்டது.
கிடைக்குமிடங்கள்: சுவிட்சர்லாந்து, தமிழ்நாடு, கனடா, ஜெர்மனி, இத்தாலி, நார்வே மற்றும் அமெரிக்கா.

"MALAKAID"

ஒப்படர்த்தி - 3.80 கடினத்தன்மை - 4 ஒளிவிலகல் - 1.85
இது காப்பர் கார்பனேட்டால் ஆனது. இதை மலக்காய்டு பச்சை என்று கூறுகின்றனர். ஒளி புகாதது (Opaque) மெல்லிய பச்சை, பச்சை, கருப்பு, கலந்த பச்சையுடன், கருப்பு வரிகள் கோடுகள் காணப்படும். இந்த நிறம் மாறுபடுகின்றது.
கிடைக்குமிடங்கள்: ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜெம்பியா, ஜிம்பாபே.

"Lapis Lazuli"

ஒப்படர்த்தி - 2.70 - 2.90  கடினத்தன்மை - 5.5 ஒளிவிலகல் - 1.50
இது லசுரைட் உடன் கால்சைட்டும்பைரைட்டும் கலந்த கலவை. இது பச்சை கலந்த நீலம்,      அடர்ந்த பர்பிள் நீலம் (Dark purple Blue)    நிறங்களில் கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: மார்க்கோபோலோ, ரஷ்யா, கலிபோர்னியா, பர்மா, அங்கோலா, பாகிஸ்தான், கனடா.

"PYRITE"

ஒப்படர்த்தி - 4.9  கடினத்தன்மை - 6.25
இது இரும்பு சல்பைட்டால் ஆனது. ஒளிபுக்காதது. இது பித்தளை (Brass) கலந்த மஞ்சள் (Metallic) நிறமுடையது. இதில் இருந்து தங்கம் கிடைக்கின்றது என்று நினைத்து வந்தனர். இதற்கு முட்டாள்களின் தங்கம் என்று பெயரும் உண்டு.

"CALCITE"

ஒப்படர்த்தி - 2.6 - 2.7 கடினத்தன்மை – 3
இது கால்சியம் மற்றும் அலுமினியம் கொண்ட கலவை CaCo3 .   இது வெள்ளை, பழுப்பு, ஊதா, ஆரஞ்சு, சிகப்பு நிறங்களில் கிடைக்கின்றது. இந்த வகை கற்களை மெருகேற்ற முடியாது. 6 பட்டைகள் கொண்ட இது அடுக்கடுக்காக மிக அழகாக இருக்கும். அனைத்து வடிவத்திலும் கிடைக்க கூடியது. இவை வெட்டி எடுக்கும் போது அதிகம் உடைந்து விடுகின்றன. அழகுக்காக (Showed Piece) அதிகம் உபயோகப்படுத்துகின்றனர்.
கிடைக்குமிடங்கள்: இங்கிலாந்து, ஜெர்மனி, ஐஸ்லேண்டு, மெக்சிகன், இந்தியாவில் புனே பகுதிகள்.

"SEGENITE RUTITE VERIETY"

ஒப்படர்த்தி - 4.2 - 4.3 கடினத்தன்மை – 6.5
இவ்வகையில் படிகத்தினுள் செம்பு கம்பிகள் இலைகள், குச்சிகள் இருக்கும் பார்க்க மிக அழகாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒரு சில கற்களில் மிக அபூர்வமாக 6 நூல் கோடுகள் இருக்கும். இவ்வகை கற்கள் முப்படிக வகைகளில் மஞ்சள், சிவப்பு, பிரவுன், வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.
கிடைக்குமிடங்கள்: இந்தியா, ஆஸ்திரியா, பிரேசில்.

ORGANIC GEMS

இது உயிருள்ள உயிரினங்களால் உருவாக்கப்பட்டவை. இவ்வகை கற்கள் Organic Gems வகையைச் சேர்ந்ததவை.

AMBER - FOSSILISED RESIN

ஒப்படர்த்தி - 1.8 கடினத்தன்மை – 2.05
Chemical Compound: Complex Mixture of Resines / Succinic Acid and s Volatile Oil. ஆம்பர் என்பது ஒரு வகை மரத்தின் கோந்து (பிசின்). இது கிரேக்கப் பெயர். இது எண்ணெய்ப் பச்சை உள்ள ஒளி உடையது. மஞ்சள் அல்லது பழுப்பு நிறங்களில் கிடைக்கின்றது. இதன் உட்புறம் பார்க்கையில் எறும்பு, கொசு, இலைகள் உள்ளே அருமையாக இருக்கும். இதை மாலைகளாகவும், டாலர், தோடுகளாகவும் உபயோகிக்கின்றனர். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.  உடையும் தன்மை கொண்டது. இது மெருகேற்றப்படுவதில்லை. அப்படியே துளைகள் போட்டு உபயோகிக்கின்றனர்.
கிடைக்குமிடங்கள்: சைனா, ஜப்பான், பர்மா, ரொமானியா, கனடா.

தந்தம் (IVORY)

ஒப்படர்த்தி - 1.70 - 1.90 கடினத்தன்மை – 2.5
இது கால்சியம் பாஸ்பேட்டில் ஆன கலவையால் ஆனது. இது யானைகளில் இருந்து கிடைக்கப்படுவது. யானைகள் மிகவும் குறைவாக உள்ளதாலும், கிடைப்பது அரிதானதாகவும் இரத்தின வகையில் உள்ளது. இதன் நிறம் Rich Creamy Colour மஞ்சள், வெளிர் மஞ்சளைக் கொண்டது. இதன் வளர்ச்சியைப் பொறுத்து நிறம் மாறுபடும். தற்சமயம் தந்தம் தடை செய்யப்பட்டுள்ளதால் ஒட்டகத்தின் எழும்பில் செய்யப்பட்ட பொருட்கள் அதிகம் விற்கப்படுகின்றன. ஏமாறவேண்டாம்.
இந்திய யானை தந்தத்திற்கும், ஆப்பிரிக்க - ஆசிய யானை தந்தத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதில் வளையல், நெக்லஸ் மற்றும் மிக நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு சேகரித்து வரப்படுகின்றன.

பவளம் (CORAL)  CaCo3

ஒப்படர்த்தி - 2.30 - 2.70 கடினத்தன்மை – 3.5
இது கால்சியம் கார்பனேட் அல்லது Conchiolin என்ற தாதுக் கலவையில் ஆனது. பவளம் கடலில் இருந்து ஒருவகை பூச்சியினால் உருவாக்கப்படுகின்றது. இது கடலில் இருந்து எடுக்கும் போது ஒரு வகை கொடியைப் போல இருக்கும். இதை பவளக் கொடி என்பார்கள். இதை எடுத்து தேவைப்படும் அளவு, அறுத்து மெருகேற்றி விடுகின்றனர் (Cabochon Type). இதில் மாலைகள், சிலைகள் செய்கின்றனர். பெரிய அளவு கிடைப்பது அரிது.  இதில் சிகப்பு, வெளிர் சிகப்பு, வெள்ளி, நீல நிறம், கால்சியம் கார்பனேட் கலவை சேரும் விகிதத்தை பொருத்து நிறம் மாறுபடுகின்றது. வெள்ளை கலந்த கருப்பு, பொன்னிறம், மருத்துவத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.
கிடைக்குமிடங்கள்: இத்தாலி, ஜப்பான், மலேசியா, கருப்பு பொன் நிறப்பவளம், ஹவாய், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டிஸ்.
இது கரையும் தன்மை கொண்டது. வேதிப்பொருட்கள் படாமல் உபயோகிக்க வேண்டும்.

முத்து (PEARL)

ஒப்படர்த்தி - 2.60 - 2.70 கடினத்தன்மை – 3.5
இது கால்சியம் கார்பனேட் கன்சியோலின் மற்றும் நீர் சேர்ந்த கூட்டுக் கலவை. முத்து, கடல் சிப்பிகளில் இருந்து கிடைக்கின்றது. கடலுக்குள் இருந்து முத்துச் சிப்பிகளை எடுத்து வரும்போது  அதில் 50 சிப்பி என்றால் அதில் ஏதாவது ஒன்று அல்லது 2-ல் முத்து இருக்கும். அதிலும் 500 முத்துக்களில் ஒன்று இரண்டு நல்ல முத்துக்கள் கிடைக்கும் சிப்பிகளை வளரவிடாமல் அதிகம் அழிக்கப்பட்டு விட்டபடியால் நல்ல முத்து கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. விலையும் மிகவும் அதிகம் ஆகிவிட்டது.
கிடைக்குமிடங்கள்: ஐரோப்பா மன்னர், கலிபோர்னியா, ப்ளோரிட, அமெரிக்கா, இந்தியப் பெருங்கடல்.
வியாதிகளை குணப்படுத்த கற்கள் பெரிதும் பயன்படுகின்றன. கற்களுக்கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு.  கிரகங்களுக்கும் நாளமில்லா சுரப்பிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வியாதிகள்  நாளமில்லா சுரப்பிகள் பாதிப்பதாலேயே ஏற்படுகின்றது. அந்த நாளமில்லா சுரப்பியை தொடர்ந்து இயங்கவும், பாதிக்காமல் இருக்கவும் உதவுகிறது.
வியாதிகளுக்கு கற்களை அணியும் பொழுது தானாக ஏதாவது ஒரு கல்லை அணியக்கூடாது. ஒருவருக்கு ஒரு கல் ஒத்து வரும். இன்னொரு கல் ஒத்து வராமல் போகும். இதை பிறரைப் பார்த்து அணிவது. என்பது தவறு. ஏனென்றால்  பெயரை பொருத்து விளைவு ஒன்று உண்டு. பிறந்த தேதியை கொண்டு விளைவு ஒன்று உண்டு. இதில் எந்த விளைவோடு கல் ஒத்து செல்லவில்லை என்பது அணிபவருக்கு தெரியாது. ஆனால் ஒரு நிபுணரால் கண்டுபிடிக்க முடியும்.
வியாதிகளுக்கு கல் அணியும் பொழுது அதிர்ஷ்டக்கள் நிபுணரை கலந்து காந்தத்தத்துவ அடிப்படையில் ஆராய்ச்சி செய்து நன்மை தரும் கல்லை பார்த்து அணியவேண்டும். ஒருவருடைய பிறந்த தேதியையும், பெயரையும் வைத்து கல்லிற்குள் Opervation Power, Vibration Power, Vocal Length, Luxur, Clarity, Colour, Circle, என அனைத்தையும் பார்த்து கல் அணிவது நல்லது.
எதற்கு எச்சரிக்கிறோம் என்றால் ஒவ்வொரு கல்லும் ஒரு கிரகம். நமக்கு நன்மை தந்துவிட்டால் பரவாயில்லை. அனைவருக்கும் ஆனந்தமாக இருக்கும். அதே தீமையை தந்துவிட்டால் அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்துவிடும்.
ஆகவே, நன்மை அனுபவிக்கிறோமோ இல்லையோ, தீமையை அனுபவிக்காமல் இருப்பதற்கு தான் இந்த எச்சரிக்கை. ஆகவே யாரும் கற்களை ஏதோ ஒரு கல் என்று வாங்கி அணிவதை தவிர்த்து விட்டு உங்களுக்கே உரிய கற்களை அணிவது மிக்க நலனை தரும்.
மேலும் கற்களை அணிவது விரல்களின் தொடர்பு மிக மிக அவசியம். ஆள்காட்டி விரலில் அணியும் கல்லை ஆள்காட்டி விரலில் தான் அணியவேண்டும். இவ்வாறு கல் அணியும் முறைகளை நிபுணர்களிடம் இருந்து அறிந்து கொண்டுதான் அணியவேண்டும். தானாக அணியக்கூடாது. விரலுக்கும் கிரகத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படவேண்டும்.
ஆள்காட்டி விரல்
- குருவிரல்
நடுவிரல்
- சனி விரல்
மோதிர விரல்
- சூரியன் விரல்
சுண்டு விரல்
- புதன் விரல்
கட்டை விரல்
- சுக்கிரன் விரல்

   அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம்

1 comment:

  1. பதிவு அருமையாக உள்ளது.

    ReplyDelete